OUR CLIENTS
நந்தினிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: கமல் கோரிக்கை
நந்தினிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: கமல் கோரிக்கை Posted on 04-Feb-2017 நந்தினிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: கமல் கோரிக்கை

சென்னை
கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி, அரியலூர் மாவட்டம், சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி (17), ஆதிக்க சமூகத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கிணற்றில் சடலமாகக் கிடந்தார். இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து இந்து முன்னணி ஒன்றியச் செயலர் மணிகண்டன், அவரது நண்பர் மணிவண்ணன் உள்ளிட்ட 4 பேரைப் போலீசார் கைது செய்தனர்.


நடிகர் கமல் ஹாசன் இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: நந்தினிக்கு நியாயம் கிடைக்கவேண்டும். அது யாராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். குற்றம் செய்வதற்கு கடவுள் காரணம் கிடையாது. நான் முதலில் மனிதன். பிறகுதான் இந்தியன். தாமதமாக குரல் எழுப்புவதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். புரிந்துகொள்ளுங்கள். நியாயம் வேண்டிதான் நான் கோரிக்கை வைக்கிறேன். பழிவாங்க அல்ல என்று கூறியுள்ளார்.

Label