OUR CLIENTS
சீண்ட வேண்டாம் : ஸ்டாலின் எச்சரிக்கை
சீண்ட வேண்டாம் : ஸ்டாலின் எச்சரிக்கை Posted on 09-Feb-2017 சீண்ட வேண்டாம் : ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை
 'திராணி இருந்தால், முதல்வர் பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லுங்கள்; தி.மு.க.,வை சீண்ட வேண்டாம்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவுக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: 'என்னை பார்த்து, முதல்வர் பன்னீர் செல்வம் சிரித்து பேசி கொண்டிருந்தார்' என, அ.தி.மு.க.,வின் அதிரடி வரவான, சசிகலா குற்றஞ்சாட்டி உள்ளார்.  அ.தி.மு.க.,வுக்குள் நடக்கும் கேலி கூத்துக்களுக்கும், அரசியல் கோமாளி தனங்களுக்கும், தி.மு.க.,வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை, சசிகலா அறிய முதலில்,தமிழக அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். 

முதல்வர் பன்னீர்செல்வத்தை, 2மணி நேரம் மிரட்டி, ராஜினாமா கடிதத்தை பெற்றுள்ளார். இதனால், அ.தி.மு.க., தொண்டர்கள் கோபத்தில் உள்ளனர். அதிலிருந்து தப்பிக்க, தி.மு.க., மீது பழி போடுவது அரைவேக்காட்டு அரசியல். சட்டசபையில், நானும், முதல்வராக இருந்த ஜெயலலிதாவும், நேருக்கு நேர், பரஸ்பரம் வணக்கம் செலுத்தி, சிரித்து கொண்டிருக்கிறோம். 
ஜெயலலிதாவை பார்த்து சசிகலா, இப்படியொரு கேள்வியை கேட்டிருக்க முடியுமா. அ.தி.மு.க., வுக்குள், சிரிப்பாய் சிரிக்கும் காட்சிகளுக்கு, என்னை பார்த்து, முதல்வர் பன்னீர்செல்வம் சிரித்ததே காரணம் எனக் கூறுவது விசித்திரமானது; வெட்கக் கேடானது. 
தான் பட்ட அவமானங் களை, ஜெ., சமாதி முன் நின்று, பன்னீர்செல்வம் பட்டியலிட்டுள்ளார். திராணி இருந்தால், அதற்கு பதில் சொல்லுங் கள்; அதை விட்டுவிட்டு, தி.மு.க.,வை சீண்ட வேண்டாம். இவ்வாறு கூறியுள்ளார்.

பன்னீருக்கு ஆதரவா?ஸ்டாலின் ஆலோசனை
முதல்வர் பன்னீர்செல்வம், சட்டசபையில், பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை உரு வானால், நிபந்தனையின்றி ஆதரிப்பது குறித்து, நிர்வாகிகளுடன், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார்.

சென்னை கோபாலபுரம் வீட்டில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் சந்தித்து பேசினார். பின்னர் அங்கு, முன்னாள் மத்திய அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, எம்.எல்.ஏ.,க்கள்,வி.ஜி.ராஜேந்திரன், சேகர்பாபு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடந்தது. அப்போது, தமிழக அரசியல் நிலவரம் மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவு கோரினால், சட்டசபையில், அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவது குறித்து, விவாதிக்கப் பட்டதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Label