OUR CLIENTS
ரகசிய அணு ஆயுத நகரை உருவாக்குகிறது இந்தியா: பாகிஸ்தான் குற்றச்சாட்டு
ரகசிய அணு ஆயுத நகரை உருவாக்குகிறது இந்தியா: பாகிஸ்தான் குற்றச்சாட்டு Posted on 10-Feb-2017 ரகசிய அணு ஆயுத நகரை உருவாக்குகிறது இந்தியா: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்
இந்திய அரசு, ரகசிய அணு ஆயுத நகரை உருவாக்கி, அதில் அணு ஆயுதங்களைக் குவித்து வருகிறது என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, இஸ்லாமாபாதில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நஃபீஸ் ஜகாரியா கூறியதாவது: இந்திய அரசு, ரகசிய அணு ஆயுத நகரை உருவாக்கி, அதில் அணு ஆயுதங்களைக் குவித்து வருகிறது. இதனால், இந்தப் பிராந்தியத்தில் அதிகாரம் செலுத்தி மற்ற நாடுகளை அச்சுறுத்தும் விதமாக இந்திய அரசின் நடவடிக்கை உள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இந்திய அரசு பரிசோதித்து வருகிறது. அந்தப் பரிசோதனைகள், இந்தப் பிராந்தியத்தின் சமநிலைக்கு ஊறு விளைவிக்கும். அதிபயங்கரமான அணு ஆயுதங்களை இந்திய அரசு குவித்து வருவதை சர்வதேசச் சமூகம் கண்டறிந்து, இந்தியாவின் ஆயுதக் குவிப்பைத் தடுக்க வேண்டும்.

உலக அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என்ற இந்திய அரசின் முயற்சி தோல்வியடைந்துவிட்டது. அதற்குப் பதிலாக, பாகிஸ்தானுடன் சமாதானப் போக்கை இந்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தியா உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் சமாதானத்துடன் இருக்க வேண்டும் என்ற கொள்கையில் பாகிஸ்தான் அரசு உறுதியாக உள்ளது. அதற்காக, இந்தியாவுடன் பல முறை பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அரசு தயாராக இருந்தது. ஆனால், இந்திய அரசோ அதற்கு ஒத்துழைப்பு அளிக்கத் தவறிவிட்டது. பேச்சுவார்த்தை மூலமாக பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பதற்கு முரணான போக்குடன் இந்திய அரசு செயல்படுகிறது.

போர் ஒப்பந்தத்தை மீறி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய அரசு தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், பாகிஸ்தானில் பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்துவதற்காக தீவிரவாதிகளுக்கு இந்திய அரசு நிதியுதவியும் அளிக்கிறது என்றார் அவர்.

Label