OUR CLIENTS
எடியூரப்பா குற்றச்சாட்டில் உண்மையில்லை: சித்தராமையா
எடியூரப்பா குற்றச்சாட்டில் உண்மையில்லை: சித்தராமையா Posted on 13-Feb-2017 எடியூரப்பா குற்றச்சாட்டில் உண்மையில்லை: சித்தராமையா

பெங்களூரு
என்மீது எடியூரப்பா கூறியுள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.


கர்நாடக மாநிலம், மைசூரு விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, நான் நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள, காங்கிரஸ் கட்சியின் மேலிடத்துக்கு ரூ. 1 ஆயிரம் கோடி நிதி கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். இதில் உண்மையில்லை. அவரின் பொய்யான குற்றச்சாட்டால் காங்கிரஸ் கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுவதோடு, மக்களைத் திசை திருப்பவும் அவர் திட்டமிட்டு, செயல்பட்டு வருகிறார். அவர் முதல்வராக இருந்தபோது முறைகேடு செய்து, சிறைக்கும் சென்று திரும்பியுள்ளார். தற்போது அவர் மீது 15-க்கும் அதிகமான முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தால், மீண்டும் எடியூரப்பா சிறைக்குச் சென்றிருப்பார். ஆனால் பாஜக ஆட்சியைப் பிடித்தால், அனைத்து வழக்குகளிலிருந்தும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாஜக ஆட்சியில் காங்கிரஸ் கட்சியினர் இல்லங்களில் வருமான வரித் துறை சோதனையில் ஈடுபடுவது வாடிக்கையாகி உள்ளது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் வருமானவரித் துறையில் சோதனைகள் நடைபெறுவதில்லை.

அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹொளி இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ. 150 கோடி மதிப்புள்ள சொத்துகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான ஆவணங்களைத் தர வருமான வரித் துறையினர் மறுப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் எனக்கு வேண்டியவர்களே. இதில் யாரோ ஒருவரது வீட்டில் சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள், சோதனைக்குப் பிறகு எனக்கு நெருக்கமானவர்கள் என்ற செய்தியை பரப்புகின்றனர். உயர் மதிப்பிலான செலாவணியைத் தடை செய்யும்போது, கருப்புப் பணம் முழுவதும் மீட்கப்படும் என்றனர். ஆனால், அது நடைபெறவில்லை. பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்துக்காக உயர் மதிப்பிலான செலாவணியைத் தடை செய்தார் என்றார் சித்தராமையா.

Label