OUR CLIENTS
ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்போம்: அமெரிக்கா - கனடா கூட்டறிக்கை
ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்போம்: அமெரிக்கா - கனடா கூட்டறிக்கை Posted on 15-Feb-2017 ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்போம்: அமெரிக்கா - கனடா கூட்டறிக்கை

வாஷிங்டன்
இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளை அழிப்போம் என்று அமெரிக்காவும் கனடாவும் கூட்டறிக்கை வெளியிட்டன.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வாஷிங்டனில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில் குறிப்பிட்டிருப்பதாவது:

அமெரிக்கா - கனடா போல மிக நெருக்கமாக உறவுகள் கொண்ட இரு நாடுகள் உலகில் வேறெங்கும் இல்லை. வரலாற்று ரீதியாக, கலாசார ரீதியாக, பொருளாதார ரீதியாக இரு நாடுகளும் பின்னிப் பிணைந்துள்ளன. இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கத்துக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் கனடா முக்கியப் பங்கு வகிக்கிறது. இரு நாட்டின் திறன்களை ஒன்றுகூட்டி, பாதுகாப்புத் துறையில் மேலும் பலம் மிக்க சக்தியாக செயல்படுவோம். உலகை அச்சுறுத்தும் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் பாதுகாப்பாகச் செயல்படும் விதமாக கிடைத்து வரும் புகலிடங்களை அழிப்போம். அந்த பயங்கரவாத இயக்கத்தைப் பூண்டோடு அழிக்கும் விதமாக ராணுவ நடவடிக்கைகளை இரு நாடுகளும் மேற்கொள்ளும் என்று அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டறிக்கை வெளியிடப்பட்ட பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கனடா பிரதமர் ட்ரூடோ கூறியதாவது: பாதுகாப்பு, அகதிகள் குடியேற்றம் போன்ற விவகாரங்களில் கனடாவும் அமெரிக்காவும் நெருங்கி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கோர்டி ஹெள சர்வதேசப் பாலத் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் இரு நாடுகளின் வர்த்தக உறவு மேம்படும் என்றார்.

அதிபர் டிரம்ப் கூறுகையில், பயங்கரவாதம்தான் தற்போது உலகில் மிகப் பெரிய சவலாக விளங்குகிறது. அதனை ஒழிப்பதுதான் அமெரிக்காவின் முக்கியக் குறிக்கோள் என்றார்.

அரசியல், வர்த்தக ரீதியாகப் பல்வேறு குழுக்களுடன் இரு தலைவர்களும் இணைந்து பேச்சுவார்த்தை நிகழ்த்தினர்.  இரு நாடுகளின் பெண் தொழிலதிபர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவான்கா இடம்பெற்றார். அவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர்.

Label