OUR CLIENTS
இந்தியாவைப் பார்த்து ஜனநாயகத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி அறிவுரை
இந்தியாவைப் பார்த்து ஜனநாயகத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி அறிவுரை Posted on 15-Feb-2017 இந்தியாவைப் பார்த்து ஜனநாயகத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி அறிவுரை

பாகிஸ்தான்
அரசியலிலிருந்து விலகி நின்று ஜனநாயக மாண்பினைப் பாதுகாத்து வரும் இந்திய ராணுவத்திடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமாறு தனது சக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா அறிவுரை வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த அந்நாட்டு ராணுவத் தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃபுக்கு பதிலாக புதிய ராணுவத் தலைமைத் தளபதியாக பாஜ்வா கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.

தமது பதவியேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ராவல்பிண்டியில் உயர் ராணுவ அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைத் தளபதி பாஜ்வா கடந்த டிசம்பர் மாதம் பங்கேற்றார்.

அப்போது அவர், இந்தியாவை சுட்டிக்காட்டி பல்வேறு கருத்துகளைத் தெரிவித்ததாக பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் "தி நேஷன்' பத்திரிகையில் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ராணுவ அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவை பல்வேறு இடங்களில் தளபதி பாஜ்வா பாராட்டினார். ராணுவத்தின் பணி என்பது நாட்டு மக்களைப் பாதுகாப்பதுதானே தவிர, அரசாங்கத்தை வழிநடத்துவது அல்ல என்று பாஜ்வா வலியுறுத்தினார்.

அரசியலிலிருந்து விலகி நின்று ஜனநாயக மாண்புகளைப் பாதுகாப்பது எப்படி என்று இந்திய ராணுவத்தைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்திய பாஜ்வா, அரசுக்கும், இந்திய ராணுவத்துக்கும் இடையேயான ஒத்துழைப்பை விவரிக்கும் "ஆர்மி அண்ட் தி நேஷன்' என்ற புத்தகத்தைப் படிக்குமாறும் கூறியதாக அந்தப் பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைப் பொருத்தவரை, 1947-இல் அந்நாடு சுதந்திரம் பெற்றது முதல் அங்கு பெரும்பாலும் ராணுவ ஆட்சியே நடைபெற்று வருகிறது. அவ்வப்போதுதான், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் அரசு ஆட்சியமைத்து வருகிறது.

அவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி அமையப்பெற்றாலும் கூட, அரசு இயந்திரத்தை பாகிஸ்தான் ராணுவமே மறைமுகமாக வழிநடத்துவதாகக் கூறப்படுகிறது.

Label