OUR CLIENTS
சென்னை உள்ளிட்ட 5 உயர் நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
சென்னை உள்ளிட்ட 5 உயர் நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல் Posted on 15-Feb-2017 சென்னை உள்ளிட்ட 5 உயர் நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

புதுதில்லி
சென்னை, கேரளா உள்ளிட்ட 5 மாநில உயர் நீதிமன்றங்களைச் சேர்ந்த நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் கூறியதாவது: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷான் கௌல், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நவீன் சின்ஹா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதேபோல், கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மோகன் எம். சாந்தனா கௌடர், சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் குப்தா, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். அப்துல் நஸீர் ஆகியோரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்துள்ளார்.

அவர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பது தொடர்பான அரசு அறிவிக்கை இன்னும் ஓரிரூ தினங்களில் அரசிதழில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

உச்ச நீதிமன்றத்துக்கு 31 நீதிபதி பதவிகள் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது 23 பேரே உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக உள்ளனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்துக்கு தற்போது புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் 5 நீதிபதிகளும் பணிக்கு வந்ததும், அந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது பதவி வகிக்கும் ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், பிரபுல்லா சந்திர பந்த் ஆகியோரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடையவுள்ளது.

Label