OUR CLIENTS
பீகாரில் +2 தேர்வில் மோசடி: 204 மாணவர்கள் நீக்கம்
பீகாரில் +2 தேர்வில் மோசடி: 204 மாணவர்கள் நீக்கம் Posted on 16-Feb-2017 பீகாரில் +2 தேர்வில் மோசடி: 204 மாணவர்கள் நீக்கம்

பீகார்
பீகார் மாநிலத்தில் பனிரெண்டாம் வகுப்பு (+2) பொதுத் தேர்வில் முறைகேடு செய்ததாக, 204 பேர் நீக்கப்பட்டனர்.

பீகார் மாநிலத்தில் +2 பொதுத் தேர்வுகள், செவ்வாய்க்கிழமை (பிப்.14) தொடங்கின. இந்நிலையில், இரண்டாவது நாளான புதன்கிழமை நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் செய்ததாக 204 பேர் வெளியேற்றப்பட்டனர்.

இவர்களைத் தவிர, கயை, ஆர்வால் ஆகிய மாவட்டங்களில் ஆள் மாறாட்டம் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், அடுத்து நடைபெறவுள்ள தேர்வுகளை எழுத முடியாது என்று மாநில பள்ளித் தேர்வுகள் வாரியம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு +2 பொதுத் தேர்வில் மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. அந்தத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி, "அரசியல் அறிவியல்' என்ற பாடம் "சமையல் கலை'யைப் பற்றியது என்று ஒரு பேட்டியின்போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நிகழாண்டில் முறைகேடுகள் எதுவுமின்றி +2 பொதுத் தேர்வுகள் நடைபெறுவதை உறுதிசெய்வதற்காக, பள்ளிக் கல்வி வாரியத்தின் தலைவர் ஆனந்த் கிஷோர், நாள் முழுவதும் சில தேர்வு மையங்களுக்குச் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.
இதேபோல், பாட்னா மாவட்ட ஆட்சியர் சஞ்சய் குமார் அகர்வாலும், சில தேர்வு மையங்களுக்குச் சென்று மாணவர்களிடம் சோதனை நடத்தினார்.

பிகார் மாநிலத்தில் 1,274 மையங்களில் நடைபெற்று வரும் இந்தத் தேர்வுகள், வரும் 25-ஆம் தேதி நிறைவடைகின்றன.

Label