OUR CLIENTS
பிரதமர் மோடிக்கு பேசுவதில்தான் விருப்பம்; பணியாற்றுவதில் இல்லை: ராகுல் காந்தி தாக்கு
பிரதமர் மோடிக்கு பேசுவதில்தான் விருப்பம்; பணியாற்றுவதில் இல்லை: ராகுல் காந்தி தாக்கு Posted on 16-Feb-2017 பிரதமர் மோடிக்கு பேசுவதில்தான் விருப்பம்; பணியாற்றுவதில் இல்லை: ராகுல் காந்தி தாக்கு

புதுதில்லி
பிரதமர் நரேந்திர மோடிக்கு பேசுவதில்தான் விருப்பம் உள்ளது; பணியை செய்வதில் விருப்பம் இல்லை'' என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம், ஜெய்த்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாஜக எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் வெறுப்புணர்வை பரப்பும் செயலில் ஈடுபடுகிறது. நாட்டு மக்களை ஒருவருடன் ஒருவர் சண்டையிட வைக்கிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுக்கு ஒரு செய்தியை விடுக்கிறேன். எந்தளவுக்கு அவர்கள் வெறுப்புணர்வை பரப்புகின்றனரோ, அதை விட அதிகமாக மக்களிடையே நல்லிணக்கத்தை காங்கிரஸ் பரப்பும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு பேசுவதில்தான் விருப்பம் உள்ளது. வேலையை செய்வதில் அவருக்கு விருப்பம் இல்லை. காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகள் மட்டும்தான் மக்களுக்காகப் பணியாற்றுகின்றன.

2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப் போவதாக பிரதமர் தெரிவித்தார். ஆனால் அதுபோல் வேலைவாய்ப்பு அளிக்கவில்லை. கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதியன்று அவருக்கு புதிய யோசனை உதித்தது. விவசாயிகள், தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த ரூ.500, ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறப் போவதாக தெரிவித்தார்.

கருப்புப் பணத்துக்கு எதிராக போராடுவதாக தெரிவிக்கிறார். மேலும், நாட்டு மக்கள் அனைவரையும் வங்கிகளின் முன்பு நீண்ட வரிசையில் நிற்க வைத்துவிட்டார். அந்த வரிசையில் பணக்காரர்கள் யாரையும் பார்க்க முடியவில்லை. நாட்டில் உள்ள கருப்புப் பணம் அனைத்தும் மனை வணிக ரூபத்திலும், நிலம், தங்கம் ஆகிய வடிவங்களிலும், ஸ்விட்சர்லாந்து நாட்டு வங்கிக் கணக்கிலும் உள்ளன. அதை மீட்க நடவடிக்கை எடுக்காமல், நாட்டில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்களின் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யச் செய்வதில் தீவிரமாக உள்ளார்.

ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதில் மோடி அரசு தீவிர கவனம் செலுத்துகிறது. இதை ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்களால் புரிந்து கொள்ள முடியாது. இதிலிருந்து இந்த நடவடிக்கை தோல்வி என்பது வெளிப்படுகிறது என்றார் ராகுல் காந்தி.

Label