OUR CLIENTS
உலகின் எட்டாவது கண்டம் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் சாதனை
உலகின் எட்டாவது கண்டம் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் சாதனை Posted on 18-Feb-2017 உலகின் எட்டாவது கண்டம் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் சாதனை

நியூசிலாந்து
உலகின் எட்டாவது கண்டம் நியூசிலாந்து நாட்டின் அருகில் இருப்பதாக தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


உலகத்தில் இது நாள்வரை ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்க்டிக்கா, ஐரோப்பா மற்றும் ஆத்திரேலியா என மொத்தம் 7 கண்டங்கள் தான் இருந்து வருகின்றன.

கண்டங்கள் சம்மந்தமாக தொடர் ஆராய்சியில் ஈடுப்பட்டு வந்த நியூசிலாந்து நாட்டை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர்கள் உலகின் 8 ஆவது கண்டம் நியூஸிலாந்துக்கு அருகில் இருப்பதாக தற்போது கண்டறிந்துள்ளனர்.

ஸீலான்டியா என அழைக்கப்படும் அந்தக் கண்டத்தின் ஒரு சிறிய பகுதி மட்டும் நியூஸிலாந்துக்கு அருகில் கடலுக்கு மேலாக வெளித் தோன்றிய நிலையில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்த கண்டத்தின் பரப்பளவு 5 மில்லியன் சதுர கிலோமீட்டர் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Label