OUR CLIENTS
சோமாலியா மார்க்கெட் பகுதியில் கார் குண்டு தாக்குதல்: 39 பேர் சாவு
சோமாலியா மார்க்கெட் பகுதியில் கார் குண்டு தாக்குதல்: 39 பேர் சாவு Posted on 20-Feb-2017 சோமாலியா மார்க்கெட் பகுதியில் கார் குண்டு தாக்குதல்: 39 பேர் சாவு

சோமாலியா
சோமாலியாவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 39 பேர் பலியாகினர்.


சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள மார்க்கெட் பகுதியை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று கார் வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தினர். இத்தாக்குதலில் 39 பேர் உடல் சிதறி பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

எனினும், அல்-காய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு இது போன்ற தாக்குதல்களை அந்த நாட்டில் நிகழ்த்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Label