OUR CLIENTS
விண்வெளி நிலையத்தை இந்தியா உருவாக்கும்: இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார்
விண்வெளி நிலையத்தை இந்தியா உருவாக்கும்: இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் Posted on 21-Feb-2017 விண்வெளி நிலையத்தை இந்தியா உருவாக்கும்: இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார்

மத்தியப் பிரதேசம்
விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தெரிவித்தார்.

அண்மையில் ஒரே ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி, அவை அனைத்தையும் வெற்றிகரமாக நிலைநிறுத்தி இஸ்ரோ உலக சாதனை படைத்தது.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ராஜா ராமண்ணா உயர் தொழில்நுட்ப மையத்தின் நிறுவன நாள் விழாவில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் கிரண்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒரு விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான அனைத்துத் திறன்களும் நம்மிடம் உள்ளன. அவ்வாறு அந்த நிலையத்தை அமைப்பது என்ற முடிவை அரசு எடுத்தால் நாங்கள் அதற்கான பணிகளில் இறங்குவோம். அரசு இதற்கான கொள்கையை வகுப்பதோடு, தேவையான நிதியையும், கால அவகாசத்தையும் அளிக்க வேண்டும்.

விண்ணுக்கு மனிதர்களுடன் அனுப்பக்கூடிய விண்கலத்தால் உடனடிப் பலன்கள் என்ன? என்றுதான் நாம் இதுவரை பேசிக் கொண்டிருக்கிறோம்.

அதனால்தான் விண்வெளி நிலையம் அமைப்பதற்கு எப்போது நிதி ஒதுக்குவது என்பதை நம் நாடு பரிசீலிக்கவில்லை. விண்வெளி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு நீண்ட காலச் சிந்தனை அவசியம். விரைவாக அதை அமைப்பது நல்லது. தொழில் துறையுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து இஸ்ரோ பரிசீலித்து வருகிறது.

நிலப்பரப்பு, வானிலை நிலவரங்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கவும், தகவல் தொடர்பு வசதிகளுக்கான நெட்வொர்க்கை மேம்படுத்தவும் அதிக அளவிலான செயற்கைக்கோள்கள் தேவைப்படுகின்றன.

செயற்கைக்கோள்கள் ஏவப்படுவதன் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமே இது சாத்தியமாகும். அதற்கு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதோடு, சாதனங்களின் விலையையும் குறைக்க வேண்டும் என்றார் கிரண்குமார்.

Label