OUR CLIENTS
24-ம் தேதி ஜெ., பிநற்த நாளை கொண்டாட பன்னீர் செல்வம் மெகா திட்டம்!
24-ம் தேதி ஜெ., பிநற்த நாளை கொண்டாட பன்னீர் செல்வம் மெகா திட்டம்! Posted on 22-Feb-2017 24-ம் தேதி ஜெ., பிநற்த நாளை கொண்டாட பன்னீர் செல்வம் மெகா திட்டம்!

சென்னை
சசிகலா மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை அறுவடைசெய்ய, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் திட்டமிட்டு அதற்காக ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதியைத்  தேர்ந்தெடுத்துள்ளார். இன்னும் சில மாதங்களில் பாருங்கள், யாருக்கு எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கும் என்று தெரியும்” சிரிக்கிறார்கள் பன்னீர் அணியின் முக்கியப் புள்ளிகள்.

சசிகலாவுக்கு எதிராக தீடீர் என வெடித்துக் கிளம்பிய பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க. வில் மட்டுமல்ல பொதுமக்களிடமும் ஆதரவு பெருகியது.பன்னீருக்கு ஆதரவு தரவேண்டும் என்று அ.தி.மு.க எம்.எல்.ஏக்களைப் பொதுமக்கள் வலியுறுத்தியது, இதுவரை நடைபெறாத ஒரு நிகழ்வாக அமைந்தது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள்  தீபாவும் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருந்த நிலையில், பன்னீர் செல்வம்-தீபா இருவரும் இணைந்து பணியாற்றப் போவதாக அறிவித்தனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை கிடைத்து, அவர் தற்போது சிறையில் இருந்தாலும், அவருடைய குடும்ப உறுப்பினர்களின்  கட்டுபாட்டில்தான்  தமிழகத்தின் ஆட்சி இருந்துவருகிறது. இதனையே தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்தி, மக்கள் ஆதரவைத் தங்கள் பக்கம் திரட்ட திட்டமிட்டுவருகிறார்கள் பன்னீர்-தீபா அணியினர். அதற்காக தமிழகம் முழுவதும் நீதி கேட்டு நெடும்பயணம் செல்ல முடிவுசெய்துள்ளனர். வரும் 24-ம் தேதி அன்று ஜெயலலிதாவின் பிறந்த தினம் வருகிறது. அன்று, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, பன்னீர் செல்வம், தீபா உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, நகரம், கிராமம் என அனைத்து பகுதி மக்களிடமும் தங்களுக்கு ஆதரவு கேட்க உள்ளார்கள். ஏற்கெனவே கிராமப் பகுதிகளில் உள்ள பெண்களிடம் தீபாவுக்கு கணிசமான ஆதரவு உள்ளதால், இந்தச் சுற்றுப்பயணத்தின்மூலம் அதைப் பலபடுத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.

பன்னீர் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், “எங்கள் பணி முடியவில்லை. இனி, மக்களைச் சந்திக்க உள்ளோம். சுற்றுப்பயணத் திட்டங்கள் விரைவில் அறிவிக்கடும்” என்று தெரிவித்துள்ளார். தீபாவின் ஆதரவாளர்களுக்கும் 24-ம் தேதிக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உங்களுக்கு அறிவிப்பு வரும் தயாராக இருங்கள் என்று சொல்லபட்டுள்ளது.சசிகலாவின் முதல்வர் கனவு கலைந்ததுபோல, அவர் கைவசம் இருக்கும் அ.தி.மு.க வின் பொதுச்செயலாளர் பதவியும் சட்டபடி செல்லாது என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது பன்னீர் தரப்பு. ஒருவேளை அந்தப் பதவிக்கும் சிக்கல் வந்தால், அ.தி.மு.க-வை கைப்பற்ற இந்தச் சுற்றுப்பயணம் வாய்ப்பாக அமையும் என்று கருதுகின்றனர் பன்னீர் தரப்பினர்.

“சட்டசபையில் பெரும்பாண்மையை எங்களால் நிரூப்பிக்க முடியாமல் போனதற்குக் காரணம், எம்.எல்.ஏ.க்களை விடுதியில் அடைத்து வைத்து இருந்ததால்தான்.  இப்போது, அனைவரும் வெளியே இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் வேலையை ஆரம்பித்துவிட்டோம். இன்னும் சில மாதங்களில் பாருங்கள், யாருக்கு  எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கும் என்று தெரியும்” சிரிக்கிறார்கள் பன்னீர் அணியின் முக்கியப் புள்ளிகள். பன்னீர்  போடும் கணக்கு வெல்லுமா என்பது போகப் போகத் தெரியும்.

Label