OUR CLIENTS
சீனிவாசமங்காபுரத்தில் 5-வது நாள் விழா கல்யாண வெங்கடேஸ்வரசாமி மோகினி அவதாரத்தில் வீதி உலா- இரவு கருட உற்சவம் கோலாகலம்!
சீனிவாசமங்காபுரத்தில் 5-வது நாள் விழா கல்யாண வெங்கடேஸ்வரசாமி மோகினி அவதாரத்தில் வீதி உலா- இரவு கருட உற்சவம் கோலாகலம்! Posted on 22-Feb-2017 சீனிவாசமங்காபுரத்தில் 5-வது நாள் விழா கல்யாண வெங்கடேஸ்வரசாமி மோகினி அவதாரத்தில் வீதி உலா- இரவு கருட உற்சவம் கோலாகலம்!

திருமலை
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை உற்சவரான கல்யாண வெங்கடேஸ்வரர் மோகினி அவதாரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது கோவிலின் நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை கருட வாகன வீதி உலா (கருட உற்சவம்) நடந்தது. அதில், உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமி தங்க வைர நகைகள், ஏழுமலையான் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட தங்க லட்சுமி ஆரம், காசு மாலை, திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் உள்ள ஆண்டாள் தாயார் சூடி கொடுத்த துளசிமாலை ஆகியவைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி கோயிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோவிலின் நான்குமாட வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். சாமி வீதி உலாவுக்கு முன்னால் ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமிகளும் கோலாட்டம் ஆடினர். நாட்டுப்புற நடனம் நடந்தது. விழாவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி போலா.பாஸ்கர், துணை அதிகாரி வெங்கட்டய்யா, கோவில் கண்காணிப்பாளர் தினகர்ராஜு, உதவி பறக்கும் படை அதிகாரி கங்கராஜு, கோயில் உதவி அதிகாரி தனஞ்செயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Label