OUR CLIENTS
ஆரணியில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆலோசனை கூட்டம்!
ஆரணியில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆலோசனை கூட்டம்! Posted on 22-Feb-2017 ஆரணியில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆலோசனை கூட்டம்!

ஆரணி
ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில் முன்னாள் முதல்&அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆலோசனை கூட்டம் மாவட்ட பொருளாளர் சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில் நடந்தது. நகர ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் பையூர் ஏ.சந்தானம் வரவேற்றார்.

கூட்டத்தில் வருகிற 24ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, ஓ.பன்னீர்செல்வத்தையும் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா ஆகியோரின் தலைமையை ஏற்று கரத்தை வலுபடுத்துவோம் என்றும் வருகிற உள்ளாட்சி தேர்தலில் யாரை நாம் அறிமுகம் செய்கிறோமோ அவர்களை வெற்றி பெறச்செய்து முழு மூச்சாக பாடுபடுவோம். என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் செல்விபழனி, மலர்மணி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கே.எஸ்.கிருஷ்ணன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள் ஈஸ்வரிநரசிம்மன், வரலட்சுமிகணபதி, எஸ்.சண்முகம், டி.கண்ணன். சிவகாமிஜெகதீசன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய அவைத்தலைவர் என்.நரசிம்மன் நன்றி கூறினார்.

Label