OUR CLIENTS
ராமநத்தம் அருகே பரபரப்பு டிரைவரின் கை, கால்களை கட்டிப்போட்டு பணம் பறிப்பு!
ராமநத்தம் அருகே பரபரப்பு டிரைவரின் கை, கால்களை கட்டிப்போட்டு பணம் பறிப்பு! Posted on 22-Feb-2017 ராமநத்தம் அருகே பரபரப்பு டிரைவரின் கை, கால்களை கட்டிப்போட்டு பணம் பறிப்பு!

திட்டக்குடி
ராமநத்தம் அருகே ஓடும் லாரியை மறித்து டிரைவரின் கை, கால்களை கட்டிப்போட்டு பணத்தை பறித்து சென்ற மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 29), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு செங்கல்பட்டில் இருந்து ஒரு லாரியில் கார்களை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி புறப்பட்டார்.

இந்த நிலையில் அதிகாலை 4.30 மணிக்கு கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்த லக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென லாரியை வழிமறித்து நிறுத்தினர். இதையடுத்து அந்த மர்ம நபர்கள், ராமனை வலுக்கட்டாயமாக லாரியில் இருந்து கீழே இறக்கினர். பின்னர் அவரது கை, கால்களை கயிற்றால் கட்டிவிட்டு, சரமாரியாக தாக்கினர்.

இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ராமன் மயங்கி விழுந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் 3 பேரும் ராமனின் சட்டை பையில் இருந்த ரூ.20 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த நிலையில் ராமன் மயங்கி கிடந்ததை பார்த்த, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மற்றும் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ராமன் தாக்கப்பட்ட இடத்தையும், லாரியையும் பார்வையிட்டு ஏதேனும் தடங்கள் கிடைக்கிறதா? என சோதனை செய்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரின் கை, கால்களை கட்டிப்போட்டு அவரை தாக்கிவிட்டு பணத்தை பறித்து சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Label