OUR CLIENTS
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்துக்கு விலை நிர்ணயம் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல்!
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்துக்கு விலை நிர்ணயம் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல்! Posted on 22-Feb-2017 விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்துக்கு  விலை நிர்ணயம் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல்!

விருத்தாசலம்
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்துக்கு விலை நிர்ணயம் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருத்தாசலத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைந்துள்ளது. இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விருத்தாசலம், சிறுபாக்கம், பெண்ணாடம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல், உளுந்து, மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்களை விற்பனை செய்து விட்டு செல்வார்கள். தற்போது நெல், உளுந்து அறுவடை பணிகள் நடந்து வருவதால் நெல்மூட்டைகளையும், உளுந்து மூட்டைகளையும் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று விவசாயிகள் 500க்கும் மேற்பட்ட உளுந்து மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆனால் அந்த மூட்டைகளை வியாபாரிகள் எடை போட மறுத்தனர். இதுகுறித்து விவசாயிகள் முறையிட்டபோது, உளுந்திற்கான விலையை அதிகாரிகள் நிர்ணயிக்கவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு திரண்டு வந்து கடலூர்-விருத்தாசலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உளுந்துக்கு உரிய விலை உடனே நிர்ணயம் செய்யப்படும் என ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Label