OUR CLIENTS
காமராஜர் மணி மண்டபம் கட்டும் பணி 6 மாதத்தில் முடிவடையும்: நமச்சிவாயம்
காமராஜர் மணி மண்டபம் கட்டும் பணி 6 மாதத்தில் முடிவடையும்: நமச்சிவாயம் Posted on 22-Feb-2017 காமராஜர் மணி மண்டபம் கட்டும் பணி 6 மாதத்தில் முடிவடையும்: நமச்சிவாயம்

புதுச்சேரி
புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் கட்டப்பட்டு வரும் காமராஜர் மணிமண்டபப் பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும் என பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் அருகே, காமராஜர் மணிமண்டபம் அமைக்க, 2007-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 3.75 ஏக்கரில் தொடங்கிய கட்டுமான பணிகள் நிதி நெருக்கடியால், பணிகள் துவங்கிய வேகத்திலேயே நின்றது. அதையடுத்து, 7 ஆண்டிற்குப் பிறகு,ரூ. 23.6 கோடியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல்வர் ரங்கசாமி ஆட்சியில், இரண்டாவது முறையாக மணிமண்டபத்திற்கு பூமி பூஜை நடந்தது. ஆமை வேகத்தில் நடந்த பணிகள் தர்போது காங்கிரஸ் ஆட்சியில் கட்டும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டனர். பாரவையிட்டபின் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், ரூ.22 .60 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

இன்னும் 6  மாத காலத்திற்குள் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வரும். மேலும் 4,400 சதுர அடியில் தரைத்தளம், 3,900 சதுர அடியில், மணிமண்டப முதல் மாடியில் நுலகம், கருத்தரங்கு கூடம், திறந்தவெளி திரையரங்கம் ஆகியவை அமைக்கப்படவுள்ளது. மேலும் அரசு விழாக்களும் இங்கு நடைபெறும் எனவும் நமச்சிவாயம் தெரிவித்தார்.

Label