OUR CLIENTS
ஜெயலலிதா பிறந்த நாளில் 69 லட்சம் மரக் கன்றுகள்... தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி
ஜெயலலிதா பிறந்த நாளில் 69 லட்சம் மரக் கன்றுகள்... தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி Posted on 24-Feb-2017 ஜெயலலிதா பிறந்த நாளில் 69 லட்சம் மரக் கன்றுகள்... தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த தினத்தை ஒட்டி, மரக்கன்றுகள் நடும் மிகப்பெரிய திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதற்கான நிகழ்ச்சி சென்னை தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடந்தது.

ஜெயலலிதாவின் 69-வது பிறந்த தினத்தை ஒட்டி, 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்தப் புதிய திட்டம் செயல்பட உள்ளது.

கட்சி அலுவலகத்தில் விழா:
ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி, அதிமுக தலைமை அலுவலகத்திலும் இன்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று, விழா மலரை வெளியிடுகிறார்.

Label