OUR CLIENTS
ராணுவ வீரர்களின் மனவலிமை அதிகரித்துள்ளது: அமித் ஷா
ராணுவ வீரர்களின் மனவலிமை அதிகரித்துள்ளது: அமித் ஷா Posted on 24-Feb-2017 ராணுவ வீரர்களின் மனவலிமை அதிகரித்துள்ளது: அமித் ஷா

புதுதில்லி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்த பிறகு, ராணுவ வீரர்களின் மனவலிமை பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி, மகராஜ்கஞ்ச் நகரில் அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அவர் கூறியதாவது: எல்லைப் பகுதியில் முன்பெல்லாம் இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்துவர். பின்னர், அவர்களே அந்தச் சண்டையை முடித்துக் கொள்வர். ஆனால், தற்போது அவர்கள் தாக்குதல் நடத்தும்போது நமது ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். ராணுவ வீரர்களை அவமதிக்க யாருக்கும் உரிமையில்லை.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பசுவதை கூடங்களுக்குத் தடை விதிக்கப்படும். நில மாஃபியா கும்பலுக்கும் முடிவு கட்டப்படும் என்று அமித் ஷா தெரிவித்தார்.

Label