OUR CLIENTS
குரவி வீரபத்ர சுவாமி கோயிலுக்கு "தங்க மீசை' காணிக்கை
குரவி வீரபத்ர சுவாமி கோயிலுக்கு "தங்க மீசை' காணிக்கை Posted on 25-Feb-2017 குரவி வீரபத்ர சுவாமி கோயிலுக்கு

தெலங்கானா
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தங்க ஆபரணங்கள் காணிக்கை அளித்ததைத் தொடர்ந்து, தெலங்கானா மாநிலம், மெஹபூபாபாத் மாவட்டம், குரவியிலுள்ள வீரபத்ர சுவாமி கோயிலுக்கு "தங்க மீசை'யை காணிக்கையாக வழங்கியுள்ளார் அந்த மாநில முதலவர் கே.சந்திரசேகர் ராவ்.

வீரபத்ர சுவாமி கோயிலுக்கு வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் வருகை தந்த அவர், ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தங்க மீசையை சுவாமிக்கு அணிவிப்பதற்காக வழங்கினார்.இரு தினங்களுக்கு முன், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அவர் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கியிருந்தார். தெலங்கானா தனி மாநிலம் உருவாக வேண்டும் என்று திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டியிருந்ததாகவும், அந்த வேண்டுதல் நிறைவேறியதால் தங்க ஆபரணங்களை காணிக்கையாக அளித்ததாகவும் அவர் கூறினார். இதனிடையே, இந்த விவகாரத்தில் சந்திரசேகர் ராவ் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொதுமக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்துவதாக, அவர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்தியுள்ளன.

Label