OUR CLIENTS
அமெரிக்காவில் இந்து கோயிலை பாதுகாக்கும் பணியில் இந்திய முஸ்லீம் போலீஸ்
அமெரிக்காவில் இந்து கோயிலை பாதுகாக்கும் பணியில் இந்திய முஸ்லீம் போலீஸ் Posted on 25-Jul-2016 அமெரிக்காவில் இந்து கோயிலை பாதுகாக்கும் பணியில் இந்திய முஸ்லீம் போலீஸ்

இண்டியானா:
இந்தியாவில் உள்ள புனே லோனாவாலாவை சேர்ந்தவர் ஜாவேத்கான். இவர் கடந்த 2000-ம் ஆண்டு அமெரிக்கா சென்று, 2001-ம் ஆண்டு இண்டியானாபோலீஸ் நகரில் நிரந்தரமாக குடியேறியுள்ளார். தேக்வாண்டோ என்ற தற்காப்புக் கலையில் 8 முறை கருப்பு நிற பெல்ட்கள் மற்றும் கிக்பாக்ஸிங்கில் சாம்பியன் பட்டம் வென்ற இவர், தற்போது அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் நகரில் உள்ள பிரபல இந்து கோயிலின் பாதுகாப்பு பணியை கவனிக்கும் இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் தனது மகளை தெலுங்கு இளைஞருக்கு திருமணம் செய்துவைத்துள்ளார். இந்த திருமணத்தின் போதுதான் இண்டியானாபோலீஸ் நகரில் இருக்கும் இந்த கோவில் பற்றி அறிந்துக்கொண்டுள்ளார். மேலும் தானே முன்வந்து இந்த கோவிலின் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட விரும்புவதாக கேட்டுள்ளார். இதனை அடுத்து அவர் கோவிலின் பாதுகாப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

இது குறித்து ஜாவேத் கூறியதாவது “நாங்கள் இந்தியர்கள். எங்கள் குடும்பத்தில் பாதி பேர் இந்துக்கள். மேலும் இந்து, முஸ்லீம் மதங்கள் வேறுபாட்டில் நம்பிக்கை கிடையாது. நாம் அனைவரும் இந்தியர்கள். இந்து-முஸ்லீம் வேறுபாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை. மேலும் நான் எதுவும் சிறப்பாக செய்யவில்லை, என்னுடைய வேலையைதான் செய்கிறேன். நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள். ஆனால் வேறு வேறு பெயர்களின் அவரை வழிப்படுகிறோம்” என்று கூறியுள்ளார்.

Label