OUR CLIENTS
7 புதிய கோள்கள்: அமெரிக்கா கண்டுபிடிப்பு!
7 புதிய கோள்கள்: அமெரிக்கா கண்டுபிடிப்பு! Posted on 25-Feb-2017 7 புதிய கோள்கள்: அமெரிக்கா கண்டுபிடிப்பு!

வாஷிங்டன்
7 புதிய கோள்கள் பூமியைப் போன்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் வேற்றுகிரக வாசிகள் வாழ வாய்ப்பு இருப்பதாகவும் நாசா அறிவித்து உள்ளது.

சூரிய குடும்பம் மட்டுமல்ல...
விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா முன்னணியில் இருக்கிறது. செவ்வாய், வியாழன் கோள்களுக்கு விண்கலங்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, சூரிய குடும்பத்துக்கு அப்பால் உள்ள கோள்கள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டு உள்ளது.

புதிய கோள்கள்:
சூரிய குடும்பம் மட்டுமல்ல பூமியைப் போன்ற அளவு கொண்ட 7 புதிய கோள்களை கண்டுபிடித்து இருப்பதாகவும், இந்த கோள்கள் ஒரு நட்சத்திரத்தை சுற்றி அமைந்து இருப்பதாகவும் நாசா தெரிவித்து இருக்கிறது.

பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த கோள்கள் அமைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒளி ஒரு ஆண்டு காலத்தில் பயணம் செய்யும் தூரம் ஒரு ஒளி ஆண்டு ஆகும். ஒளி வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது.

வேற்றுகிரக வாசிகள்:
7 கோள்களில் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி தண்ணீர் இருக்கும் பட்சத்தில் அங்கு உயிரினங்களும், வேற்றுகிரக வாசிகளும் வாழ வாய்ப்பு உள்ளதாகவும் நாசா தெரிவித்து இருக்கிறது. 3 கோள்களில் இந்த வாய்ப்பு அதிகம் இருப்பதாக நாசா கருதுகிறது.

விண்வெளியில் சில புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும், புதிதாக சூரிய குடும்பத்துக்கு அப்பால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்று தெரியவந்து இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நாசா விஞ்ஞானி தாமஸ் ஜூர்புசென் தெரிவித்தார்.

Label