OUR CLIENTS
பாக்தாத்தில் தற்கொலைப்படை கார் குண்டு தாக்குதல்: 14 பேர் பலி
பாக்தாத்தில் தற்கொலைப்படை கார் குண்டு தாக்குதல்: 14 பேர் பலி Posted on 25-Jul-2016 பாக்தாத்தில் தற்கொலைப்படை கார் குண்டு தாக்குதல்: 14 பேர் பலி

பாக்தாத்:
ஈராக்கில் அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினரும் அரசுப் படைகளையும் பொதுமக்களையும் குறிவைத்து தாக்குகின்றனர். அவ்வகையில் நேற்று பாக்தாத் சோதனைச்சாவடி மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


இந்நிலையில் பாக்தாத்தின் வடக்கே சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள காலிஸ் நகர நுழைவாயிலில் இனறு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. காரில் வெடிகுண்டு நிரப்பி வந்த தீவிரவாதி, போக்குவரத்து அதிகம் உள்ள சோதனைச்சாவடி மீது மோதி வெடிக்கச் செய்தான்.

இதில், 8 போலீஸ்காரர்கள், பொதுமக்கள் 6 பேர் என மொத்தம் 14 பேர் கொல்லப்பட்டதாகவும், 41 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதலில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 20 கார்களும் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

Label