OUR CLIENTS
ஆஸ்கர் விருதை புறக்கணித்தார் ‘சேல்ஸ் மேன்’ திரைப்பட இயக்குநர் ஃபர்ஹாடி
ஆஸ்கர் விருதை புறக்கணித்தார் ‘சேல்ஸ் மேன்’ திரைப்பட இயக்குநர் ஃபர்ஹாடி Posted on 27-Feb-2017 ஆஸ்கர் விருதை புறக்கணித்தார் ‘சேல்ஸ் மேன்’ திரைப்பட இயக்குநர் ஃபர்ஹாடி

லாஸ்ஏஞ்சல்ஸ்
'சேல்ஸ் மேன்' திரைப்படத்திற்கு சிறந்த அயல்மொழி திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ஆனால் அந்த விருதை வாங்காமல் புறக்கணித்தார் இயக்குநர் ஃபர்ஹாடி.

உலக திரைப்படத் துறையின் மிகப் பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று நடைபெற்றது. 89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படம், நடிகர், நடிகைகள் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் இந்த விருதுகளில், அயல்மொழி திரைப்படத்திற்கான விருதும் ஒன்று. இந்தப் பிரிவில் ஈரான் மொழித் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.

சேல்ஸ் மேன்:
அயல்மொழி படத்திற்கான ஆஸ்கர் விருதை ஈரான் நாட்டு படம் ‘சேல்ஸ் மேன்' திரைப்படம் தட்டிச் சென்றது. ஈரான் நாட்டு அமெரிக்கா என்றால் பிரச்சனை இல்லாமல் இருக்குமா? அதுவும் அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருக்கும் போது இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும், தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் நெருக்கடி இல்லாமலா இருக்கும்?

ஆஸ்கர் விருது புறக்கணிப்பு:
ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்காவுக்குள் வெளிநாட்டவர் வர தடை விதித்திருப்பது மனிதகுலத்துக்கு எதிரானது என்று கூறி ஆஸ்கர் விருதினை ஆஸ்கர் விருதை புறக்கணித்துள்ளார் இத்திரைப்படத்தின் இயக்குநர் ஃபர்ஹாடி.

ஃபர்ஹாடி விமர்சனம்:
அமெரிக்காவுக்குள் ஈரான் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால், விருது வழங்கும் விழாவில் அந்த படத்தின் இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹாடி கலந்து கொள்ளவில்லை. இதனால் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அவர் அனுப்பிய கடிதம் வாசிக்கப்பட்டது. அதில், அமெரிக்காவுக்குள் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை மனித குலத்துக்கு எதிரானது என்று அவர் விமர்சித்தார்.

டிரம்ப்பின் அடாவடி:
வேலைவாய்ப்புகள் முதல் அனைத்து துறைகளிலும் அமெரிக்கர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற கருத்தினை முன்வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப், சிரியா, ஈரான் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க 90 நாட்கள் தடை விதித்து உத்தரவிட்டார். அவரின் இந்த உத்தரவுக்கு உலக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘சேல்ஸ் மேன்' திரைப்படத்தின் இயக்குநர் ஆஸ்கரை புறக்கணித்தார்.

Label