OUR CLIENTS
அரசியல் ஆதாயத்துக்காக தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசு: இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
அரசியல் ஆதாயத்துக்காக தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசு: இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு Posted on 01-Mar-2017 அரசியல் ஆதாயத்துக்காக தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசு: இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

சென்னை
அரசியல் ஆதாயத்துக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: பருவமழை பொய்த்தது, கர்நாடகம் தண்ணீர் தர மறுத்தது போன்ற காரணங்களால் தமிழகம் முழுவதும் வறட்சி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த நிலையில், உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு மட்டும் நிவாரண நிதி அறிவித்து விட்டு மற்றவர்களை தமிழக அரசு கைவிட்டுள்ளது.

விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண நிதி மிகக் குறைவானது, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை ஏற்கப்படவில்லை.

விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அறிவிக்காதது அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண நிதியும் 5 ஏக்கருக்கு மட்டுமே வழங்கப்படும் என நிபந்தனை போட்டு வழங்கப்படுவதால் பெரும்பாலான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஊழல் முறைகேட்டுக்கு வழிவகுத்துள்ளது.

தமிழகத்தின் வறட்சி நிலையைச் சமாளிக்க மத்திய அரசிடம் ரூ.39,565 கோடி நிவாரண நிதி கோரப்பட்டது. அதுபோல, வர்தா புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதத்தை ஈடுகட்ட ரூ. 22,573 கோடி நிதி கோரப்பட்டது. இதன் மீது மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர், ஆனால், இதுவரை எந்தவொரு பணமும் மாநில அரசுக்கு கொடுக்கப்படவில்லை. கட்சி, அரசியல் ஆதாயத்துக்காக தமிழகத்தின் நலனுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது.

இந்நிலையில், மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மார்ச் 3-ஆம் தேதி மாவட்ட, வட்ட தலைநகரங்களில் நடைபெறும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்று ஆதரவு அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Label