OUR CLIENTS
விவசாயிகளை அழிக்கும் முயற்சியை கைவிட வேண்டும்
விவசாயிகளை அழிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் Posted on 01-Mar-2017 விவசாயிகளை அழிக்கும் முயற்சியை கைவிட வேண்டும்

புதுக்கோட்டை
புதுகை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் புதுகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளை அழிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை மதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது: விளைநிலங்களில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிராக நம்மாழ்வார் தொடங்கி வைத்த போராட்டம், தற்போது உச்சம் பெற்றுள்ளது. நைஜீரியாவில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கப்பட்ட 5 ஆண்டுகளில் பருத்தி, விதைகடலை உற்பத்தி 65%மேல் சரிவடைந்து, தற்போது அந்த நாடே பேரிழப்பை சந்தித்து வருகிறது. அதுபோல, தமிழகத்தில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தற்போது, செயல்படுத்த முயற்சிப்பது விவசாயிகளை பேரச்சத்தில் தள்ளியுள்ளது.

விளைநிலங்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழகத்துக்குள் அனுமதிக்க முடியாது. இத்திட்டத்தின் மூலம் தஞ்சை, புதுகை மாவட்டத்தின் வளங்கள் அழிந்து போகும். மத்திய அரசு திட்டத்தை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவேன் என்றார்.

Label