OUR CLIENTS
கட்சி விதிகளின்படியே சசிகலா நியமனம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக பதில்
கட்சி விதிகளின்படியே சசிகலா நியமனம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக பதில் Posted on 01-Mar-2017 கட்சி விதிகளின்படியே சசிகலா நியமனம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக பதில்

சென்னை
கட்சி விதிகளின்படியே வி.கே.சசிகலா அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்' என்று அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் உள்ள நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்கள் அளித்திருந்த புகார் மனுவுக்கு பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சசிகலாவுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியது.

இதன்படி, நோட்டீஸுக்குரிய பதிலை அதிமுக துணை பொதுச் செயலாளர் (சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்) டி.டி.வி. தினகரன், அக்கட்சியின் வழக்குரைஞர் செந்தில் மூலம் செவ்வாய்க்கிழமை காலையில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார்.

இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கையெழுத்திட்டுள்ள கடிதம் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கட்சி விதிகளின்படியே அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். இதில் விதிகள் ஏதும் மீறப்படவில்லை. இடைக்கால பொதுச் செயலாளரை நியமிக்க பொதுக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. முழு நேரப் பொதுச் செயலாளரை நியமிக்க வேண்டுமானால் மட்டுமே முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும்.

சசிகலாவை இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்ய பொதுக் குழுவில் தீர்மானத்தை முன்மொழிந்தவர் ஓ.பன்னீர்செல்வம். பின்னர் அவர் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு கட்சித் தலைமைக்கு எதிராகத் திரும்பியுள்ளார். மிகப் பெரிய கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா திடீரென உயிரிழந்தார். இதையடுத்து, மாற்று ஏற்பாட்டை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளருக்கான தேர்வை பொதுக்குழு கூடி மேற்கொண்டது. இதில் விதி மீறல்கள் ஏதுமில்லை என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Label