OUR CLIENTS
முதல்வர் பழனிசாமியுடன் நெடுவாசல் போராட்டக் குழு சந்திப்பு
முதல்வர் பழனிசாமியுடன் நெடுவாசல் போராட்டக் குழு சந்திப்பு Posted on 01-Mar-2017 முதல்வர் பழனிசாமியுடன் நெடுவாசல் போராட்டக் குழு சந்திப்பு

சென்னை
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நெடுவாசல் போராட்டக் குழுவினர், தமிழக முதல்வர் பழனிசாமியை சந்தித்துப் பேசினர்.


ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து புது தில்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துவிட்டு நேற்று மாலை சென்னை திரும்பினார் முதல்வர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நெடுவாசல் கிராம மக்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை தலைமைச் செயலகத்தில், நெடுவாசல் போராட்டக் குழுவின் பிரதிநிதிகள், முதல்வர் பழனிசாமியை சந்தித்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Label