OUR CLIENTS
ஸ்டாலின் 65வது பிறந்தநாள்... வாழ்த்திய பாஜக தமிழிசை, காங். திருநாவுக்கரசர்!
ஸ்டாலின் 65வது பிறந்தநாள்... வாழ்த்திய பாஜக தமிழிசை, காங். திருநாவுக்கரசர்! Posted on 01-Mar-2017 ஸ்டாலின் 65வது பிறந்தநாள்... வாழ்த்திய பாஜக தமிழிசை, காங். திருநாவுக்கரசர்!

சென்னை
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் 65-வது பிறந்தநாளையொட்டி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் 65-வது பிறந்தநாள் இன்று கொண்டாப்பட்டது. தம்முடைய பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார். 

பின்னர் அண்ணா மற்றும் பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதைசெலுத்தினார். மேலும் திமுக நிர்வாகிகளும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். 

ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ட்விட்டரில் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதில் தங்களுக்கு ஆரோக்கியமும்நீண்ட ஆயுளும் நான் வணங்கும் ஆண்டவனை வேண்டி தங்களின் அரசியல் பணி தொடர மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று புதுக்கோட்டையிலிருந்து தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார். 

Label