OUR CLIENTS
அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை: மாநிலங்களவை உறுப்பினர் அதிரடி!
அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை: மாநிலங்களவை உறுப்பினர் அதிரடி! Posted on 02-Mar-2017 அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை: மாநிலங்களவை உறுப்பினர் அதிரடி!

சென்னை
அதிமுகவின் கட்சிப்பொறுப்புகளில் யாரை நியமிப்பது என்பது உள்ளிட்ட உட்கட்சி விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கோ அல்லது தேர்தல் ஆணையத்திற்கோ எந்த உரிமையும் இல்லை என்று  அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


அதிமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் நவநீதகிருஷ்ணன். இவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:

அதிமுகவின் கட்சிப்பொறுப்புகளில் யாரை நியமிப்பது என்பது இந்த கட்சியின் உள் விவகாரமாகும். அப்படியே அதில் ஏதாவது பிரச்சினை இருந்தாலும் அதை எங்களுக்குள் முடிவு செய்து கொள்வோம். என்னைப் பொறுத்த வரையில் இந்த விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கோ அல்லது தேர்தல் ஆணையத்திற்கோ எந்த உரிமையும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Label