OUR CLIENTS
ஆர்.கே நகர் தொகுதியில் 18 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
ஆர்.கே நகர் தொகுதியில் 18 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் Posted on 06-Mar-2017 ஆர்.கே நகர் தொகுதியில் 18 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

சென்னை
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த சுமார் 18 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை வழங்கினார்.

வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் பி.வெற்றிவேல் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். இதில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின்போது சுமார் 18 ஆயிரம் பேருக்கு தையல் இயந்திரங்கள், மூன்று சக்கர சைக்கிள்கள், சலவைப் பெட்டி, தள்ளு வண்டிகள், மீன்பாடி வண்டிகள், இட்லி பாத்திரங்கள், சேலைகள் உள்ளிட்டவற்றை முதல்வர் பழனிசாமி வழங்கினார். முன்னதாக புஷ்பவனம் குப்புசாமி-அனிதா குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வடசென்னை மக்களவை உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, பகுதி செயலாளர்கள் லட்சுமி நாராயணன், சந்தானம், சுந்தர் அதிமுக நிர்வாகிகள் நேதாஜி கணேசன், சிட்கோ சீனு, வண்ணை கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Label