OUR CLIENTS
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இரட்டை வேடம் போடுகின்றன : ஜி.கே.வாசன் பேச்சு
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இரட்டை வேடம் போடுகின்றன : ஜி.கே.வாசன் பேச்சு Posted on 06-Mar-2017 நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இரட்டை வேடம் போடுகின்றன : ஜி.கே.வாசன் பேச்சு

சென்னை
போரூரை அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் காமராஜர் சிலை திறப்பு விழா நடந்தது. இதில் த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காமராஜர் சிலையை திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலையான ஆட்சி இல்லை. தற்போதுள்ள ஆட்சி நிரந்தரமா?, தற்காலிகமா? என்று மக்களிடம் கேட்டால் 99 சதவீதம் பேர் தற்காலிகம் என்றுதான் கூறுவார்கள். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு வாக்கலிக்க வாய்ப்பு கொடுக்காமல் இருந்துள்ளனர். மக்கள் விரும்பாத ஆட்சி தற்போது நடத்தி கொண்டிருக்கிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டம்
இந்த நிலை மாறவேண்டும், ஆட்சியாளர்கள் மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த பொதுமக்கள் போராட்டம் நடத்துகின்றனர். அந்த போராட்டத்திற்கு 4–வது நாளிலேயே த.மா.கா ஆதரவு தந்தது. தற்போது தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை, தமிழக அரசு வறட்சி நிவாரணம் அறிவித்து விட்டு அதனை கொடுக்காமல் உள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இரட்டை வேடம் போடுகின்றன. ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் இல்லை. த.மா.கா மக்கள் விரும்பும் கட்சியாக உள்ளது. மக்கள் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தும் கட்சி த.மா.கா. வாக இருக்கும். உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Label