OUR CLIENTS
நியாய விலைக் கடைகளில் பொருள்கள் தட்டுப்பாடு ஒரு வாரத்துக்குள் சீரடையாவிட்டால் அறப்போராட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு
நியாய விலைக் கடைகளில் பொருள்கள் தட்டுப்பாடு ஒரு வாரத்துக்குள் சீரடையாவிட்டால் அறப்போராட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு Posted on 06-Mar-2017 நியாய விலைக் கடைகளில் பொருள்கள் தட்டுப்பாடு ஒரு வாரத்துக்குள் சீரடையாவிட்டால் அறப்போராட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை
நியாய விலைக் கடைகளில் பொருள்கள் தட்டுப்பாடு ஒரு வாரத்துக்குள் சரிசெய்யப்படாவிட்டால் தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் முன் திமுக சார்பில் அறப்போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கொளத்தூர் தொகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட ஆய்வின்போது அவர் அளித்த பேட்டி: நியாய விலைக் கடைகளில் பொருள்கள் முறையாக வழங்கப்படவில்லை என தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் திமுக சார்பில் அண்மையில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையை விமர்சித்த அந்தத் துறையின் அமைச்சர் காமராஜ் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் அரசியல் ஆதாயத்துக்காக இதுபோன்ற பொய்யான தகவலை திமுக வெளியிட்டிருப்பதாகப் பதிலளித்துள்ளனர்.

எனவே, திமுக சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை உறுதி செய்துகொள்ளும் வகையிலேயே, இந்த ஆய்வை மேற்கொண்டேன்.
பொருள்களை வாங்குவதற்குக் காத்திருந்த பொது மக்களிடமும் விளக்கமாக பேசியிருக்கிறேன். கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் பதிவுப் புத்தகங்களையும் ஆய்வு செய்தேன்.

பாமாயில் டிசம்பர் மாதத்திலும் பருப்பு ஜனவரி மாதத்திலும் மட்டும் அளவு குறைவாக வந்திருப்பது தெரியவந்தது. இதை ஊழியர்கள் ஆதாரத்தோடு காண்பித்தனர். பொருள்கள் சரிவர விநியோகிக்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் இதே நிலைதான் இருக்கிறது.

இதையும் உறுதிப்படுத்துவதற்காக, திமுகவின் 89 சட்டப்பேரவை உறுப்பினர்களும் உடனடியாக அவரவர் தொகுதியில் இருக்கும் நியாயவிலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு முறையான அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

எனவே, நியாயவிலைக் கடைகளில் நிலவிவரும் பொருள்கள் தட்டுப்பாட்டை தமிழக அரசு ஒரு வாரத்துக்குள்ளாக சரிசெய்யவில்லை எனில், தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் முன் திமுக சார்பில் அறப்போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Label