OUR CLIENTS
ரூ.235 கோடி 61 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்
ரூ.235 கோடி 61 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார் Posted on 08-Mar-2017 ரூ.235 கோடி 61 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்

சென்னை, மார்ச் 8-
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பாளையங்கோட்டையில் நடந்த விழாவில் திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களின் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். 

இதன்படி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில், 27 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் நல ஒப்புயர்வு மையம் ஒன்றும், மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி விடுதி கட்டடம், 14 கோடியே 98 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துப்புரவு பணியாளர்கள் குடியிருப்புகள், அலுவலக கட்டடங்கள் மற்றும் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள், கரந்தனேரியில் 110 கிலோவாட் மின்திறன் கொண்ட துணை மின் நிலையம் உள்ளிட்ட 102 பணிகள் 88 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவில் நிறைவு செய்யப்பட்டு இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்கல்வித்துறையின் சார்பாக நாகலாபுரத்திலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கான கட்டடங்கள், மாணவர் விடுதிகள், வ.உ.சி. பொறியியல் கல்லூரி மாணவர் விடுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், அங்கன்வாடி கட்டடங்கள், பசுமை வீடுகள், பஞ்சாயத்து சேவை மையங்கள் உள்ளிட்ட 124 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 822 திட்டப் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் சந்தை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 500 மெட்ரிக் டன் சேமிப்புக் கிடங்கு 50 இலட்சம் ரூபாய் செலவிலும், கைவினைஞர்களின் தரமான தயாரிப்புகளை நியாயமான விலையில் விற்பனை செய்ய 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கன்னியாகுமரியில் நகர்ப்புற கண்காட்சி / குடில், 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் சுகாதாரப் பணியாளர்கள் குடியிருப்பு, நாகர்கோவிலில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட 174 பணிகள் 22 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

ஆக மொத்தம், 1098 திட்டப்பணிகள், 235 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவு செய்யப்பட்டு, இன்றைய தினம் மக்களின் பயன்பாட்டுக்கென துவக்கி வைக்கப்பட்டுள்ளன.

Label