OUR CLIENTS
தமிழக மீனவர்களை நாங்கள் சுடவில்லை : இலங்கை அரசு மறுப்பு
தமிழக மீனவர்களை நாங்கள் சுடவில்லை : இலங்கை அரசு மறுப்பு Posted on 08-Mar-2017 தமிழக மீனவர்களை நாங்கள் சுடவில்லை : இலங்கை அரசு மறுப்பு

கொழும்பு, மார்ச் 8-
தமிழக மீனவர் மீதான துப்பாக்கிச்சூட்டை நாங்கள் நடத்தவில்லை என இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,”தமிழக மீனவரின் உயிரிழப்பு வருத்தம் அளிக்கிறது. ஆனால் இந்த துப்பாக்கிச்சூட்டை இலங்கை கடற்படை நடத்தவில்லை.

இந்த சம்பவம் குறித்து இலங்கை கடற்படையிடம் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டது. அதில் இலங்கை கடற்படையினர் எந்த துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபடவில்லை என்பது தெரியவந்தது.

இந்திய மீனவர்கள் மட்டுமல்லாது, எந்த நாட்டின் மீனவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது இலங்கை கடற்படை மனிதாபிமான முறையில் தான் நடந்து வருகிறது. இதே நிலையைத்தான் தொடர விரும்புகிறோம். இருப்பினும் இந்த குற்றச்சாட்டு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்.”என தெரிவித்துள்ளது.

Label