OUR CLIENTS
விரைவில் புதிய ரூ.10 நோட்டுகள் அறிமுகம் : ரிசர்வ் வங்கி அறிவிப்பு
விரைவில் புதிய ரூ.10 நோட்டுகள் அறிமுகம் : ரிசர்வ் வங்கி அறிவிப்பு Posted on 10-Mar-2017 விரைவில் புதிய ரூ.10 நோட்டுகள் அறிமுகம் : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை, மார்ச் 10 -
கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 10 ரூபாய் நோட்டுகளை விரைவில் அறிமுகப்படுத்தவிருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விரைவில் புதிய ரூ.10 நோட்டுகளை புழக்கத்தில் விடவிருக்கிறோம்.

"மகாத்மா காந்தி வரிசை-2005' வடிவில் வெளியிடப்படும் அந்த ரூபாய் நோட்டுகளின் இரு பேனல்களிலும் ஆங்கில "எல்' எழுத்துகள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கும்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலின் கையெழுத்துடன் வெளிவரும் புதிய ரூ.10 நோட்டுகளில், "அச்சிடப்பட்ட ஆண்டு' என்னும் பகுதியில் 2017 என குறிப்பிடப்பட்டிருக்கும்.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாக, ரூபாய் நோட்டின் வரிசை எண்கள் அளவில் சிறிதிலிருந்து, பெரிதாக வளர்வதுபோல் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் முதல் 3 எழுத்துகள் மட்டும் ஒரே அளவு கொண்டதாக இருக்கும்.

புதிய ரூ.10 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஏற்கெனவே புழக்கத்திலிருக்கும் அனைத்து ரூ.10 நோட்டுகளும் வழக்கம்போல் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கியின் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Label