OUR CLIENTS
ஒரே தவணையில் கடனை செலுத்துவது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் பேச தயார்... விஜய் மல்லையா!
ஒரே தவணையில் கடனை செலுத்துவது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் பேச தயார்... விஜய் மல்லையா! Posted on 10-Mar-2017 ஒரே தவணையில் கடனை செலுத்துவது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் பேச தயார்... விஜய் மல்லையா!

லண்டன், மார்ச் 10 -
தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரத்து 380 கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாமல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2–ந் தேதி லண்டனுக்கு தப்பி விட்டார். அவர் மீது பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அவர் நாடு திரும்பி, தன் மீதுள்ள வழக்குகளை சந்திப்பதற்கு மறுத்து விட்டார்.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு வழக்கு தொடுத்துள்ளது. நேற்று இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு இங்கிலாந்து  அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், ஒரே தவணையில் கடனை திருப்பித் தருவதற்கு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ஒரே தவணையில் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான கொள்கை பொதுத்துறை வங்கிகளிடத்தில் உள்ளது. நூற்றுக்கணக்கான பேர் கடனை இவ்வாறு திருப்பிச் செலுத்தியுள்ளனர். எங்களுக்கு மட்டும் இது மறுக்கப்படுவது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் இதற்கான கோரிக்கையை வைத்தப் போது வங்கிகள் பரிசீலிக்காமல் ஏற்க மறுத்து விட்டன.  நியாயமான முறையில் கடனைத் திருப்பி செலுத்துவதற்கு நான் பேச்சு வார்த்தைக்குத் தயாராகவே இருக்கிறேன். எனவே உச்ச நீதிமன்றம் தலையிட்டு வங்கிகளுக்கு பேச்சுவார்த்தைக்கான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Label