OUR CLIENTS
ஆண்டர்சன்னை மிரட்டிய டோனி
ஆண்டர்சன்னை மிரட்டிய டோனி Posted on 27-Jul-2016 ஆண்டர்சன்னை மிரட்டிய டோனி

இங்லாந்:
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணித்தலைவராக திகழ்ந்து வரும் மகேந்திர சிங் டோனி, எப்பொழுதும் அணி வீரர்களை விட்டு கொடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவார் என்பது அனைவரும் அறிந்ததே.


இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ட்ரென்ட் பிரிட்ஜ் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கி விளையாடியது.

சம்பவத்தின் போது களத்தில் டோனியுடன், ஜடேஜா விளையாடி கொண்டிருந்தார். அப்போது, இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தை ஜடேஜா சந்திக்க, பந்து மட்டையில் படமால் நேராக விக்கெட் கீப்பரிடம் சென்றது.

கீப்பர் பந்தை பிடிக்க, இங்கிலாந்து வீரர்கள் நடுவரிடம் அவுட் கேட்டு முறையிட்டனர். இதை கண்ட ஜடேஜா சிரித்துள்ளார்.

இதனையடுத்து நடுவர் அவுட் தர மறுக்க கோபமைடைந்து ஆண்டர்சன், ஜடேஜாவின் அருகில் சென்று, சிரிக்கும் பற்களை உடை மாற்றும் அறைக்கு வந்து உடைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து ஜடேஜா டோனியிடம் முறையிட்டுள்ளார்.

ஓவர் முடிந்த பின்னர், உணவு இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டு வீரர்கள் அனைவரும் அறைக்கு திரும்பி கொண்டிருந்த போது, டோனி ஆண்டர்சனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

அப்பேது, டோனி, நீ உடை மாற்றும் அறைக்கு வந்தால் நான் உன்னை ஜூஸ் பிழிந்துவிடுவேன் என ஆண்டர்சன்னை மிரட்டியுள்ளார்.

இறுதியில், ஜடேஜாவிடம் முரண்பாடாக நடந்து கொண்டதாக ஐசிசி நடத்தை விதிமுறைகளின்படி ஆண்டர்சன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

Label