OUR CLIENTS
தொலைந்து போன சந்திராயன்-1 விண்கட்... கண்டுபிடித்த நாசா!
தொலைந்து போன சந்திராயன்-1 விண்கட்... கண்டுபிடித்த நாசா! Posted on 11-Mar-2017 தொலைந்து போன சந்திராயன்-1 விண்கட்... கண்டுபிடித்த நாசா!

ஸ்ரீஹரிகோட்டாவில், மார்ச் 11 -
இந்திய விண்வெளி துறையின் சாதனைகளில் ஒன்று நிலவுக்கு அனுப்பப்பட சந்திராயன்-1 என்ற விண்கலம். கடந்த 2008-ம் ஆண்டு, அக்டோபர் 22-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளியில் ஏவப்பட்ட இந்த விண்கலம் திடீரென 2009-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந் தேதி முதல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் 8 ஆண்டுகள் கழித்து சந்திராயன்-1 பத்திரமாக நிலவை சுற்றிக் கொண்டிருப்பதாக நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கலத்தை பூமியில் இருந்து தொடர்பு கொள்ள முடியாது என்பதால் உபயோகம் அற்றதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்திய விஞ்ஞானிகள் மீண்டும் நிலவுக்கு சந்திராயன்-2 என்ற விண்கலத்தை வரும் 2018ஆம் ஆண்டு செலுத்த உள்ளனர்.

Label