OUR CLIENTS
நான் எப்போதுமே ஆல் ரவுண்டர்தான்: தமிழக வீரர் அஸ்வின் வெளிப்படை!
நான் எப்போதுமே ஆல் ரவுண்டர்தான்: தமிழக வீரர் அஸ்வின் வெளிப்படை! Posted on 27-Jul-2016 நான் எப்போதுமே ஆல் ரவுண்டர்தான்: தமிழக வீரர் அஸ்வின் வெளிப்படை!

ஆன்குவா:
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், முதல் இன்னிங்சில் துடுப்பாட்டத்தில் 113 ஓட்டங்களை விளாசியது மட்டுமல்லாமல், 2வது இன்னிங்சில் பந்துவீச்சில் 83 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகள் அள்ளி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமானார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அசத்திய அஸ்வின் ஐசிசி டெஸ்ட் பவுலர் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

அஸ்வின் இந்த போட்டியின் மூலம் ஆல் ரவுண்டராக மாறியுள்ளார் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், நான் எப்போதுமே ஆல் ரவுண்டர்தான் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

இதுகுறித்து அஸ்வின் கூறுகையில், ஆன்குவா தொடரில் 6-வது நபராக களம் இறங்கியது ஆச்சர்யம் அளிக்கிறது. போட்டி நடந்த நாள் காலையில் என்னிடம் வீராட் கோஹ்லி வந்து பேசினார்.

நாங்கள் உங்களை 6-வது இடத்தில் களம் இறக்க விரும்புகிறோம். இந்த மாற்றம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என்றார். இதனால் 6-வது இடத்தில் களம் இறங்கி சிறப்பாக விளையாடி, அணிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.

நான் எப்போதும் என்னை ஒரு ஆல் ரவுண்டராகவே மதிப்பிடுகிறேன். 8-வது இடத்தில் களம் இறங்குவதை விட, நான் ஏற்கனவே 6-வது இடத்தில் களம் இறங்கி விளையாடி இருந்தால் இன்னும் அதிகப்படியான சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

6-வது இடத்தில் களம் இறங்குவது போல், ஐந்தாவது இடத்திலும் களம் இறங்கி என்னால் சமாளிக்க முடியும். இங்கிருந்து பலன்மேல் பலன் பெற்று என்னால் மேலே செல்லமுடியும் என்று நம்புகிறேன்.

துணைக் கண்டத்தில் நான் ஐந்து விக்கெட்டுக்களுக்கு மேல் பல முறை எடுத்துள்ளேன். ஆசியாவை விட்டு வெளியே ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்த வேண்டும் என்று விரும்பினேன். தற்போது அது நடந்துள்ளதால் அதிக மகிழ்ச்சி அடைகிறேன் என கூறியுள்ளார்.

Label