OUR CLIENTS
ரியோ ஒலிம்பிக்கில் இருந்து ரோஜர் பெடரர் விலகல்! ரசிகர்கள் அதிர்ச்சி
ரியோ ஒலிம்பிக்கில் இருந்து ரோஜர் பெடரர் விலகல்! ரசிகர்கள் அதிர்ச்சி Posted on 27-Jul-2016 ரியோ ஒலிம்பிக்கில் இருந்து ரோஜர் பெடரர் விலகல்! ரசிகர்கள் அதிர்ச்சி

சுவிஸ்:
சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் காயம் காரணமாக ரியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


34 வயதாகும் ரோஜர் பெடரர் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 17 பட்டம் வென்றவர். 2008ல் தங்கம், 2012ல் வெள்ளி என இரு ஒலிம்பிக் பதக்கம் வென்றார்.

இந்நிலையில் காயம் காரணமாக ரியோ ஒலிம்பிக் மற்றும் இந்த ஆண்டு மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில், நான் இந்த ஆண்டு ஆரம்பத்தில் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இதில் இருந்து முழுமையாக குணமாகவில்லை.

தற்போது எனக்கு ஓய்வு தேவை என டாக்டர்கள் அறிவுறுத்தினர். சில ஆண்டுகள் தொடர்ந்து விளையாட வேண்டுமெனில் நான் ஓய்வெடுத்தாக வேண்டும். வேறு வழியில்லாத நிலையில் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுகிறேன்.

மேலும், இந்த ஆண்டு மீதமுள்ள போட்டித் தொடர்களிலும் தன்னால் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Label