OUR CLIENTS
திருத்தணி கோவிலில் நாளை ஆடிக்கிருத்திகை விழா
திருத்தணி கோவிலில் நாளை ஆடிக்கிருத்திகை விழா Posted on 27-Jul-2016 திருத்தணி கோவிலில் நாளை ஆடிக்கிருத்திகை விழா

திருத்தணி:
திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று அஸ்வினியுடன் விழா தொடங்கியது.


இன்று பரணியை முன்னிட்டு இரவு முழுவதும் நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு பச்சைக்கல் மரகதமாலை, வைரகிரீடம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

முக்கிய விழாவான ஆடிக்கிருத்திகை விழா நாளை (28–ந்தேதி) நடக்கிறது.

இதையொட்டி முருக பக்தர்கள் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச் சேரியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கோவிலில் குவிந்து உள்ளனர்.

பக்தர்கள் பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்ப காவடி எடுத்து வந்து ‘ஹரோ ஹரா’ என்ற கோ‌ஷத்துடன் முருகரை வழிபட்டனர்.

விழாவையொட்டி மலைக்குச் செல்லும் வழி முழுவதும் வண்ண விளக்குகள், ஆங்காங்கே சுகாதார கழிப்பிடங்கள், நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருந்தன.

சித்தூர் சாலை, அரக் கோணம் சாலை, சென்னை சாலை, திருப்பதி சாலை ஆகிய 4 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் தலைமையில் 1000த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வே.ஜெயசங்கர் தலைமையில் இணை ஆணையர் பெ.தனபாலன் மேற்பார்வையில் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Label