OUR CLIENTS
கமல்ஹாசனின் கனவு பலிக்காது... வைகைசெல்வன்!
கமல்ஹாசனின் கனவு பலிக்காது... வைகைசெல்வன்! Posted on 13-Mar-2017 கமல்ஹாசனின் கனவு பலிக்காது... வைகைசெல்வன்!

சென்னை, மார்ச் 13-
அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் தலைமை கழகத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசு 5 ஆண்டுகள் ஆட்சி செய்வதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாகும். ஆனால் நடிகர் கமல்ஹாசன் விரைவில் தேர்தல் வரும் என்று கூறுகிறார். அவர் கனவு உலகில் இருந்து கொண்டு பேசுகிறார். கமல்ஹாசனின் கனவு பலிக்காது.

5 ஆண்டுகள் முழுமை பெற்ற பிறகு தேர்தல் வந்தாலும் அதில் அ.தி.மு.க.தான் மீண்டும் வெற்றி பெறும்.

தேர்தலை கண்டு பயப்படும் இயக்கம் அ.தி.மு.க. கிடையாது. பல்வேறு தேர்தல்களில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடி இருக்கிறோம்.

ஆர்.கே.நகரில் தீபா போட்டியிடக் கூடாது என்று நாங்கள் எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. தீபா முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார். பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வரும் தீபா அதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அ.தி.மு.க. ஒரு வலுவான இயக்கம். இந்த கட்சியை பார்த்துதான் தி.மு.க. பயந்து கொண்டு இருக்கிறது என்பதை கனிமொழி புரிந்து கொள்ள வேண்டும்.

ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு. எங்கள் பக்கம் உண்மை, நியாயம், நேர்மை இருக்கிறது.

ஆர்.கே.நகர் தேர்தலில் நாங்கள் அமோக வெற்றி பெறுவோம். எங்களுக்கு எந்தவித தடையும் இல்லை. கட்சிக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை தூள் தூளாக்கி இரட்டை சின்னத்தில் நின்று வெற்றி வாகை சூடுவோம் என அவர் கூறினார்.

Label