OUR CLIENTS
ஈரானில் வெடி விபத்து... 7 பேர் பலி!
ஈரானில் வெடி விபத்து... 7 பேர் பலி! Posted on 13-Mar-2017 ஈரானில் வெடி விபத்து... 7 பேர் பலி!

டெக்ரான், மார்ச் 13-
ஈரான் நாட்டில் இந்த மாதம் 31-ந் தேதி நடைபெற உள்ள ஈரானிய நெருப்பு திருவிழா, அங்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழாவின்போது நெருப்புக்குள் குதித்து வாணவேடிக்கை நடத்துவார்கள்.

இந்த திருவிழாவுக்காக அங்கு அர்டாபில் மாகாணத்தில் குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் வாண வேடிக்கைக்கான வெடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கருகி பலியாகினர். 4 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி அரசு தலைமை வக்கீல் நாசர் கூறும்போது, “குடியிருப்பு பகுதியில் ஒரு இளைஞர் வாணவேடிக்கைக்கான பட்டாசுகளை கையினால் தயாரித்து கொண்டிருந்தபோது கவனக்குறைவாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார். இந்த சம்பவம், அங்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Label