OUR CLIENTS
கேரள அரசின் தடுப்பணை கட்டும் முயற்சியைத் தடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
கேரள அரசின் தடுப்பணை கட்டும் முயற்சியைத் தடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் Posted on 14-Mar-2017 கேரள அரசின் தடுப்பணை கட்டும் முயற்சியைத் தடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, மார்ச் 14-
கேரள அரசின் தடுப்பணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதன் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய நான்கு மாவட்டங்களின் குடிநீர் தேவை பெரிதும் பாதிப்புக்குள்ளாகும்.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தேக்குவட்டையில் தடுப்பணையைக் கட்டி முடித்துவிட்டு, மஞ்சக்கண்டியில் அடுத்த அணை கட்டும் பணியைத் தொடங்கியிருக்கிறது.

காவிரியின் துணை நதியான பவானி ஆற்றின் குறுக்கே மொத்தம் 6 தடுப்பணைகளைக் கட்ட கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை விஸ்ரூபம் எடுக்கக்கூடும்.

எனவே, மத்திய அரசு இனியும் தாமதிக்காமல், கேரள அரசின் தடுப்பணைகள் கட்டும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், தமிழக மக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீர் தடையின்றி கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Label