ஆர்.கே. நகரில் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்... டிடிவி தினகரன்! Posted on 15-Mar-2017
சென்னை, மார்ச் 15-
ஆர்.கே. நகர் தொகுதியில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதாலேயே ஆர்.கே. நகரில் போட்டியிடுவதாகவும் கூறினார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் சசிகலா தரப்பு அதிமுக ஆட்சி மன்றக் குழு கூட்டம் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தெடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆர்.கே. நகரில் போட்டியிட வாய்ப்பளித்த அதிமுக மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஞானத்தாய் சசிகலாவுக்கும் நன்றி என டிடிவி தினகரன் கூறினார்.
மேலும் ஆர்.கே.நகர் தொகுதியில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திமுகவை அழிக்கவே எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.