OUR CLIENTS
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அறிவிப்பு
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அறிவிப்பு Posted on 15-Mar-2017 சென்னை  ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அறிவிப்பு

சென்னை, மார்ச் 15-
ஆர்.கே. நகர் தொகுதியின் இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளராக மருது கணேஷ் போட்டியிடுவார் என்று கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

ஆர்.கே. நகர் திமுக பகுதி செயலாளராக இருப்பவர் மருது கணேஷ். புதிய முகமான இவரை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கான வேட்பாளராக திமுக தலைமை தேர்வு செய்து அறிவித்துள்ளது.

இன்று காலையில், அதிமுக வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக திமுக வேட்பாளர் குறித்த அறிவிப்பும் வெளியாகிவிட்டது. முன்னதாக, எம்ஜிஆர் ஜெயலலிதா தீபா பேரவையைத் தொடங்கியிருக்கும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஆர்.கே. நகர் தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம்.

Label