OUR CLIENTS
ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளராக டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளராக டி.டி.வி. தினகரன் அறிவிப்பு Posted on 15-Mar-2017 ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளராக டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

சென்னை, மார்ச் 15-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஆட்சி மன்றக் குழுவானது அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் முதல் கூட்டம் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

குழுத் தலைவரான வி.கே.சசிகலா, பெங்களூரு சிறையில் இருப்பதால் இந்தக் கூட்டத்துக்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமை வகித்தார்.

குழுவின் உறுப்பினர்களாக அதிமுக அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன், இலக்கிய அணிச் செயலாளர் பா.வளர்மதி, மருத்துவ அணிச் செயலாளர் பி.வேணுகோபால், சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர் ஏ.ஜஸ்டின் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் டி.டி.வி.தினகரன் கூறியதாவது:
மறைந்த முதல்வரின் ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து நிறைவேற்ற பாடுபடுவேன். ஜெயலலிதா செய்ய நினைத்த அனைத்து திட்டங்களையும் செய்து தருவேன். அதிமுக சார்பில் போட்டி வாய்ப்பு அளித்த பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் ஆட்சி மன்றக்குழுவுக்கு நன்றி. வரும் 23-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்வேன்.

திமுக மட்டுமே எங்களுக்கு எதிர்க்கட்சியாக கருதுகிறோம். திமுகவை மட்டுமே போட்டியாக கருதுகிறேன். தொண்டர்களின் ஆதரவுடன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி தொடருவார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கக்கோரி தேமுதிக, மதிமுகவுக்கு அழைப்பு விடுத்த டி.டி.வி. தினகரன், இடைத்தேர்தலில் வெற்றிபெற்றலாம் முதல்வராகும் எண்ணமில்லை என்று தினகரன் தெரிவித்தார். 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Label