OUR CLIENTS
இரட்டை இலை சின்னத்தில் தினகரன் போட்டியிடுவது சாத்தியம் இல்லை... ஓ பன்னீர்செல்வம்!
இரட்டை இலை சின்னத்தில் தினகரன் போட்டியிடுவது சாத்தியம் இல்லை... ஓ பன்னீர்செல்வம்! Posted on 15-Mar-2017 இரட்டை இலை சின்னத்தில் தினகரன் போட்டியிடுவது சாத்தியம் இல்லை... ஓ பன்னீர்செல்வம்!

புதுதில்லி, மார்ச் 15-
இரட்டை இலை சின்னத்தில் தினகரன் போட்டியிடுவது சாத்தியம் இல்லை என்று முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியை சந்திக்கிறார். இதற்காக ஓ பன்னீர் செல்வம் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி  சென்றடைந்தார். அவருடன் ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், கே.பாண்டியராஜன், மனோஜ் பாண்டியன், செம்மலை, டாக்டர் மைத்ரேயன், சுந்தரம், அசோக்குமார் என 9 பேர் கொண்ட குழுவும் சென்றது.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வம் கூறும் போது, “ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் தினகரன் போட்டியிடுவது சாத்தியமில்லை. ஆர்.கே.நகரில் போட்டியிடும் எங்கள் தரப்பு வேட்பாளர், ஆட்சிமன்ற குழுக் கூட்டம் கூட்டி விரைவில் அறிவிக்கப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.

Label